200 ரூபாவை தாண்டியுள்ள டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி

நாட்டின் வரலாற்றில் மூன்றாவது முறையாக ரூபாவின் பெறும தியில் தேய்மானம் ஏற்பட்டு இன்று டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி 200 ரூபாவை தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தினசரி பரிமாற்ற அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் தற்போதைய கொள்முதல் விகிதம் இன்று 195.28 ரூபாவாக இருந்தது. விற்பனை விலை 200.06 ஆக இருந்தது.

இது, 2020 ஏப்ல் 9ஆம் திகதிக்கு பின்னர் முதல் ஒரு அமெரிக்க டொலருக்கு பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த விற்பனை விலையாகும்.

2020 ஏப்ரல் 9ம் திகதியன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 200.47 ரூபாவாக இருந்தது.