புலம்பெயர் தேசத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணின் சாதனைப் பயணம்..!! தோசைக்கடை நடத்தி பெரும்வருமானம் ஈட்டும் தமிழ்ப்பெண்மணி..!!

ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்பு, ‘அப்பா, நான் கடற்கரையில் ஒரு தோசைக் கடை வைக்கட்டுமா?’ என்று தன் நீண்ட நாள் ஆசையைத் தன் தந்தையிடம் கேட்டார், அப்போது பொறியியல் படித்துக்கொண்டிருந்த அந்தத் தூத்துக்குடி மாணவி. அவர் தந்தை பல காரணங்களைக் கூறி மறுத்துவிட்டார். ஆனால், தன் கனவை அவர் கடலில் கரையவிடவில்லை, உரமாக்கினார். இன்று, ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ‘Dosa House’ என்ற உணவகத்தின் உரிமையாளராக இருக்கிறார்திருமணத்துக்குப் பின், என் கணவரின் வேலை காரணமாக ஆஸ்திரேலியாவில் குடியேற நேர்ந்தது. இங்குதான் என் ‘தோசைக் கடை’ கனவு நனவாக வேண்டும் என்று இருந்திருக்கிறது” என்று புன்னகையுடன் ஆரம்பித்தார் ஜெயந்தி பாலகிருஷ்ணன்.ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் தொழில் தொடங்குவது என்பது மிகவும் சவாலான காரியம். பலர் இதனால் கடனாளி ஆகி உள்ளனர்.இவற்றை மனதில்கொண்டு, முதலில் சிறிய அளவில் ஓர் உணவுக் கடை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தேன். இங்கு உள்ள ஒரு மார்க்கெட்டில் வாரந்தோறும் வியாழன் அன்று பலர் உணவு ஸ்டால்கள் போடுவார்கள்.

அதற்குப் பதிந்து வைத்தேன். ஏற்கெனவே பலர் காத்திருப்புப் பட்டியலில் இருந்தனர்.நானும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டேன். எனக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் ஏங்கிக்கொண்டிருந்த ஒரு நாளில், ‘நீங்கள் ஸ்டால் போடலாம்’ என்று கிரீன் சிக்னல் கொடுத்தார்கள்.2006-ம் ஆண்டு முதல் இங்கு வாராவாரம் கடை போட ஆரம்பித்தேன். பலர் எனக்கு ரெகுலர் கஸ்டமர்களாக மாறினார்கள். ‘நீங்கள் சீக்கிரம் சொந்தமாக ஒரு கடை ஆரம்பியுங்கள்’ என்று அன்புக்கட்டளை இட்டார்கள்.ஒரு வழக்கமான வியாழக்கிழமை ஸ்டால் தினத்தன்று, மிக நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது. வயதான தம்பதி ஒருவர், நான் ஸ்டால் போடும் முன்பே எனக்காகக் காத்திருந்தார். அவர்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்திருந்தார். அந்தப் பெண்மணி அப்போது சொன்ன விஷயம் என்னை உலுக்கியது. ‘என் கணவர் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, உணவு எதுவும் சரியாக உட்கொள்ள முடியாத நிலையில் உள்ளார். அவரே விரும்பி, உங்கள் தோசையைஉண்ண வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அதனால் கூட்டி வந்துள்ளேன்’ என்றார்.என் வாடிக்கையாளர்கள்தான் என் வரம், பலம் என்பதை அன்று மிக அழுத்தமாக உணர்ந்தேன். அவர்களில் பலரும் எனக்கு நண்பர்கள் ஆகினர்.காலப்போக்கில், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை ஏற்று கடை ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். கடை வைக்க இடம் கிடைப்பது என்பது மிகவும் சவாலாக இருந்தது. பல கட்ட முயற்சிக்குப் பிறகு அது சாத்தியமானது.2008-ம் ஆண்டு சொந்தமாகக் கடையைத் தொடங்கினேன். சில மாதங்களிலேயே என் கடை பிரபலமடைந்தது. இன்று வரை என் கடையில் நானேதான் எல்லா வேலைகளையும் செய்கிறேன். மாவு ஆட்டுவது முதல் தோசை சுடுவதுவரை எல்லா வேலைகளையும்செய்வேன். ஒரு பெண் உதவிக்கு இருக்கிறார்.இந்தியர்கள், ஆஸ்திரேலியர்கள், சீனர்கள், மலேசியர்கள், சிங்கப்பூர்க்காரர்கள் எனப் பல நாட்டு மக்களும் எங்கள் கடைக்கு விரும்பி வருகிறார்கள். பெரும்பாலும் சீனர்கள் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள்.ஆனால், என் உணவகத்திற்கு அவர்கள் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.6 மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் எங்கள் கடைக்கு வந்து இட்லி சாப்பிட்டுவிட்டுச் சென்றார்.சமீபத்தில், அவர் குழந்தைக்கு முதல் திட உணவாக இட்லியை என் கையால் கொடுக்க வேண்டும் என்று வந்தார். குழந்தைகள் தங்களின் பிறந்த நாளைக்கொண்டாட விரும்பும் இடமாகவும் Dosa House விளங்குகின்றது. இவற்றைவிட என்ன வேண்டும்?!எங்கள் கடையில் 24 வகை தோசை செய்கிறோம். அவற்றில் மசாலா தோசைதான் ஆஸ்திரேலியர்களுக்குப் பிரியமானது. இளவயதினர் காம்போ தோசையை விரும்புகின்றனர். இட்லி, வடை, பொங்கல், சிக்கன் கிரேவி, மீன் குழம்பு முதலியவை எங்கள் உணவகத்தின் பட்டியலில் சிறப்பிடம் பெறுகின்றன” என்ற ஜெயந்தி தொழில் தொடங்க நினைக்கும்பெண்களுக்கு சில வார்த்தைகள் கூறினார்.நாம் என்ன நினைக்கிறோமோ, எதை மனதார ஆசைப்படுகிறோமோ அது நிச்சயமாக நடக்கும். நம்மை நாம் நம்ப வேண்டும்.அந்த நம்பிக்கையுடன் துணிந்து ஒரு தொழிலில் இறங்கும்போது, அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும்!