கடற்படை வீரருடன் தொடர்புகளைப் பேணிய 75 பேர் வவுனியாவில் தனிமைப்படுத்தல்…!

கொரோனோ தொற்றுக்குள்ளான வவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்திருந்த 75பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்றிருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், குறித்த நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் சுகாதார பிரிவு மற்றும் பொலிசாரால் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.அவர்களிற்கான சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், நேற்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களிற்கு குறித்த நபர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.