மீன் தொட்டியில் தவறி வீழ்ந்த ஒரு வயதுக் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்..!!

கல்கிரியாகம, ஆடியாகல பகுதியிலுள்ள அமைந்துள்ள வீடொன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள் வீழ்ந்து ஒரு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இச் சம்பவமானது நேற்று பிற்பகல் 2. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்வம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் அனைவரும் இருந்துள்ளதுடன்,அவர்களின் கவனயீனம் காரணமாகவே குழந்தை மீன் தொட்டியில் தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.