காலியில் கொரோனா தடுப்பூசி ஏற்றிய ஹோட்டல் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த ஹோட்டல் ஊழியரின் இரத்த தட்டுகள் வேகமாக குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்வதற்காக இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்திய காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
