நாடு முழுவதிலும் கொரோனா அபாயம்..வெளிமாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு விரைவில் தடை..?

வரும் பண்டிகைகாலத்தை முன்னிட்டு மீண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)கோரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக GMOA இன் உதவிச் செயலாளர் டாக்டர் சமந்தா ஆனந்த தெரிவித்தார்.பண்டிகைக் காலங்களில் மற்ற மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.இது மீண்டும் கொழும்பில் பரவும் நோய்த்தொற்றை அதிகரிக்கச் செய்யும் என்றார்.இதன்மூலம் பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது பெரும் முக்கியத்துவமாகும் என்று டாக்டர் சமந்தா ஆனந்த கூறினார்.