பிரித்தானியாவில் தமிழர்களை தாக்கிய பொலிசார்!

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு பிரித்தானியா தலைநகர் லண்டனில் 16 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அம்பிகா செல்வக்குமார் வீட்டிற்கு முன் கூடி பிரிட்டிஷ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும் பிரித்தானிய அரசைக் கண்டித்தும், இத்தீர்மானத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் வாக்களிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தும், லண்டனில் அம்பிகா செல்வகுமார் பிப்ரவரி 27ம் திகதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அம்பிகா செல்வகுமாருக்கு ஆதரவாக வடமேற்கு லண்டன், கென்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன் குவிந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

லண்டன் பெருநகர காவல்துறையினர் போராடத்தை கலைக்க முயன்ற போது மோதல் ஏற்பட்டதையடுத்து, பொலிசார் ஒருவரை கைது செய்தும் காட்சி வெளியாகியுள்ளது.