கொரோனா பீதியில் முழுமையாக முடக்கப்பட்ட கொழும்பு மாநகரின் ஒரு பகுதி..!!

கொழும்பு நாரஹேன்பிட்டியில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியிலுள்ள பகுதி முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி, தாபரே மாவத்தையில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்தப் பகுதி முடக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இன்று காலை இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, பணிப்பாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.நாங்கள் வழமையாக செய்யும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இதனால், வைரஸ் இருப்பவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அது பரவாமல் தடுக்கலாம்.மக்கள் மிகவும் பொறுப்புடன் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.கொழும்பின் பல பகுதிகளில் நேற்று நான்கு கொரோனா வைரஸ் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.60ற்க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளது. சரியான இலக்கத்தை தற்போது கூற முடியாது. அவர்களில் அதிகமானோர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்.ஹேவ்லொக் வீதியில் கொழும்பு நகரசபை துப்புரவு பிரிவில் பணி புரியும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.