சர்வதேசத்திடம் நீதி கோரி உண்ணாநோன்பிருந்த அம்பிகையின் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு!!

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக சர்வதேசத்திடம் நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. அவருக்கு ஆதரவாக நேற்றையதினம் பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை விடுத்ததன் காரணமாகவும், உலகமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழின அமைப்புக்கள் மற்றும் கட்சிகளின் கோரிக்கை காரணமாகவும், இன்றுடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.பிரித்தானிய அரசிடம் 4 அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என கடந்த 17 நாட்களாக அம்பிகை செல்வகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.அம்பிகையின் கோரிக்கைகளில் ஒன்று முழுமையாகவும் இன்னொன்று அண்ணளவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே, வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், இலங்கைக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளில் பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது.அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியான கண்காணிப்பு நடைமுறை ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.இந்நிலையிலேயே, அம்பிகை செல்வகுமார் தனது போராட்டத்தில் வெற்றிக் கண்டு இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள உள்ளார்.

https://www.facebook.com/watch/live/?v=271195864583771&ref=watch_permalink