60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக இலவசமாக தம்மை பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


60 வயதுக்கும் மேற்பட்டோர் எவ்வித சிக்கலும் இன்றி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக இணையதளத்தினூடாக தம்மை பதிவு செய்து கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொழும்பு மாநகரசபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையதளத்தினூடாகவும் அல்லது e.channelling.com என்ற இணையதளத்தினூடாகவும் அல்லது e.channelling நடமாடும் சேவையூடாகவும் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.