யாழ்.நகரில் திடீரென நிலத்தில் விழுந்து உயிரிழந்த முச்சக்கரவண்டிச் சாரதி!!

யாழ்ப்பாணத்தில் ஒருவர் திடீரென நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி, பரமேஸ்வரா வீதியிலுள்ள உணவகமொன்றில் இன்று காலை இந்தச் சம்பவம் நடந்தது.


உணவருந்த ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்து வந்த சாரதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சாப்பிடுவதற்கு முன்னதாக அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியுடன் எழுந்து சென்று, அருகிலுள்ள தூணில் சாய்ந்தபடி பேச ஆரம்பித்தவர்,அப்படியே சரிந்து நிலத்தில் விழுந்தார்.உடனடியாக அவர் யாழ் போதனா வைத்தியாசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்பது பரிசோதனையில் தெரிய வந்தது.