ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இக்கட்டான நிலையில் இலங்கை..கை குடுக்குமா இந்தியா.? வெளியாகியுள்ள முக்கிய செய்தி..

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப்போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான குழுக்கள் முன்வைத்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா என்பதை இந்தியா வெளியிடவில்லை.தீர்மானத்தின் மீது இந்தியா உறுதியற்றதாகவே இருந்தது.எனினும் 13 வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த இந்தியா இலங்கையை வலியுறுத்தியது.மேலும் தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்த நாடுகளில் பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் கியூபா ஆகியவை அடங்குகின்றன.இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு கடந்த அரசாங்கத்தால் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தற்போதைய அரசாங்கம் விலகியதால் இந்தியா – இலங்கை இருதரப்பு உறவுகளில் சமீபத்திய காலங்களில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.