அதிகாலை வேளையில் திடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்..எரிந்து சாம்பலாகிய 40 வீடுகள்..!!

மாளிகாவத்தை, கஜிமாவத்தை வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 – 50 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.குறித்த இடத்தில் 250ற்க்கும் அதிகமான வீடுகள் உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.6 தீயணைக்கும் வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.எனினும், இந்த தீவிபத்தினால் உயிர் சேதங்கள் அல்லது காயங்கள் இதுவரையில் பதிவாகவில்லை என தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.