அடுத்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் திட்டமிடும் பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசி மேகன்!!

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் அலுவகத்தில் பணியாற்றியவரும், பெயர் வெளியிட விரும்பாத தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலத்தை மேற்கோள் காட்டி Daily Mail இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
ஓப்ராவுடனான நேர்காணலில் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, பிரித்தானியா அரச குடும்பம் மீது சரமாரியாக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஓப்ரா நேர்காணலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பரபரப்பை பயன்படுத்த தனது அரசியல் பிரவேசத்தை தொடங்க மேகன் மெர்க்கல் திட்டமிட்டு வருவதாக தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலம் தெரிவித்துள்ளார்.
பிரச்சாரத்தைத் தொடங்கவும், அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடுவது குறித்தும் பைடனின் அமெரிக்க ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் மெர்க்கல் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டில், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ டைபன் 82 வயதாகும் என்பதால் அவர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பார், அதனால், மெர்க்கல் போட்டியிட விரும்புவதாக ஜனநாயக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளார்களாம்.