இலங்கையில் இன்று புதிதாக 142 நபர்களுக்கு தொற்று உறுதி

இலங்கையில் இன்று புதிதாக 142 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87,742 ஐ எட்டியுள்ளது.

இதற்கிடையில், 84,648 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

மேலும் 2,568 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அத்துடன் 526 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.