கணினி தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் 40,000 வெற்றிடங்கள்!

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10,000 மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இந்த மாதத்தில் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கணினி தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் 40,000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பன Online ஊடாக கற்பித்தல் பாடநெறியை ஆரம்பித்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.