யாழ்.பண்ணை கடற்கரை பகுதியில் துப்புரவு பணியில் ..

யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரினால் பண்ணை கடற்கரை பகுதியில் துப்புரவு பணிகள் நடத்தப்பட்டிருக்கின்றது.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உயித் லியனகேயின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.பண்ணை கடற்கரைப்பகுதி
துப்பரவுசெய்யும் பணி இன்றைய தினம் யாழ்ப்பான பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில்

யாழ்.பொலிஸ் உத்தியோகத்தர்களினால் யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப்பகுதி துப்புரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் நீண்ட காலமாக பிளாஸ்டிக் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் காணப்படுவதன் காரணமாக அப்பகுதி மிகவும் அசுத்தமாக காணப்படுவதன் காரணமாக

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவ்வீதியால் பயணித்த போது குறித்த விடயத்தை அவதானித்து இன்றைய தினம் அதனை பொலிஸாரை சுத்தப்படுத்துமாறு

விடுத்த கோரிக்கைக்கு இணங்க யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஒழுங்குபடுத்தலில் துப்புரவு பணி முன்னெடுக்கப்பட்டது.