புலம்பெயர் தேசத்தில் தனது பிள்ளைகளை வெட்டிக் கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரத் தந்தை.!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் ஒருவர் லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கைச்சேர்ந்த நிதி என அழைக்கப்படும் நிதின்குமார் வயது (40) என்பவரே இந்த செயலைச்செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று முன்தினம் ஞாயிறு மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது தனது இரண்டு பிள்ளைகளையும் கூரான ஆயுதத்தால் தாக்கி கொன்ற இவர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இந்தச் சம்பவத்தில்அவரது ஒருவயது பெண்குழந்தை சம்பவ இடத்திலேயே, உயிரிழந்த நிலையில், மூன்று வயது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், உயிரிழந்துள்ளார்.நிதின்குமாரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்த கோரமுடிவை அவர் எடுத்திருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது.