ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவித்தல்..

யாழ்.மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் என்று அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேசிய அடையாள அட்டையின் 3 அல்லது 4 இலக்கத்தை கொண்டவர்கள் மட்டுமே வெளிவர முடியும் என்றும் அரச அதிபர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.ஊடரங்குச் சட்டம் தளர்வின்போது பொதுமக்கள் பின்னபற்ற வேண்டிய நடவடிக்கை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது;யாழ்.மாவட்டத்தில் இன்று ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இயங்கு நிலைக்கு வருகிறது.அத்தியாவசியமற்ற சேவையில் ஈடுபடுபவர்கள் தமது சேவைகளை இடைநிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்கும். அரச அலுவலங்களில் பணிபுரிபவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் சுழல்ச்சி முறையில் தமது பணிகளை தொடர பணிக்கப்பட்டுள்ளது.