ஒரேநாளில் முன்னெடுக்கப்படும் கொரோனாவிற்கான பி.சி.ஆர். பரிசோதனைகள்!!

கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்று 27 ஆம் திகதி மாத்திரம் சுமார் 1,400 மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இதேவேளை நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.