வாழ்க்கையில் முன்னேற தனித்து முயற்சி செய்யுங்கள் !

ஒருவர் தனது எதிர்காலத்தை பற்றி சிந்தித்து கொண்டு மட்டும் இருப்பதனால் அவரால் எந்தவொரு முயற்சியையும் செய்துவிட முடியாது. காரணம் அவர் சிந்தித்து கொண்டே இருப்பதால் செய்வதற்கு பயப்படுவார். இப்படித்தான் பலருடைய வாழ்க்கை வெறும் கனவுகளோடு மட்டுமே செல்கிறது.ஒன்றையாவது செய்வதற்கு முயற்சி எடுப்பது தான் சாதிப்பதற்கும் உழைப்பதற்குமான வழியாகும்.

வெறுமனே இன்னொருவர் கூறும் அறிவுரைகளை எல்லா நேரங்களிலும் கேட்டுக்கொண்டிருப்பது எம்மை முழுநேர சோம்பேறியாக்கிவிடும். அத்தோடு மேலும் குழப்பமடைய செய்துவிடும்.ஒருவர் அடைந்த அனுபவங்கள் கஷ்டங்களை கேட்டு நாமும் முயற்சிக்க வேண்டும் என்று பலர் நினைத்தாலும் ஒருமுறை என்றாலும் களத்தில் முயற்சிக்க தயங்கிக்கொண்டும் குழம்பிக்கொண்டும் தான் இருக்கின்றார்கள்.உங்களுடைய எதிர்காலத்தில் நீங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அவ்வாறு நீங்கள் முடிவு செய்திருந்தாலும் பிறரைப் பார்த்து ஒப்பீட்டளவில் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து சந்தேகிக்கக் கூடாது.ஒரு முறையாவது முயற்சி செய்யக் கூடிய தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் நீங்கள் வளர்த்துக் கொள்ளாத போது உங்களுடைய எதிர்காலத்தை உங்களால் உருவாக்க முடியாது.

இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் பற்றி சமூக வலைத்தளங்களைப் பார்க்கும்போது நன்றாகவே புரிந்து விடுகிறது. தவறான தொடர்புகள்,நேரத்தை வீண் விரயமாகும் செயல்கள், வீடியோக்கள் மூலமாக தன்னை பெரியவர்களாக சிறந்தவர்களாக காண்பிக்கக் கூடிய நேரத்தை வீண் விரயம் செய்யக் கூடிய முயற்சிகள் என்பதை பார்க்கும்போது எதிர்காலம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன.பணத்தை உருவாக்கக்கூடிய உங்களுக்குள் இருக்கும் ஆளுமைகளை திறமைகளை கொண்டு உங்களால் எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்கிற முறையான வழிகாட்டல் கிடைக்கும்போது தான் உங்களால் ஒரு பாதையில் சரியாக பயணிக்க முடியும்.இன்னொருவரை பார்த்து இன்னொருவருடன் உங்களுடைய திறமைகளை ஒப்பிட்டு கணக்கிடுவதன் மூலம் உங்களால் ஒரு சிறந்த தீர்மானத்தை எடுக்கவே முடியாது.

நீங்கள் தொழில் செய்து கொண்டிருந்தாலும் சரி அல்லது புதிய தொழில் ஒன்றை ஆரம்பிப்பதாக இருந்தாலும் சரி நீங்கள் தெளிவான இலக்கு உடையவர்களாக குழப்பமடைய அவர்களை நீங்கள் மாற்றிக் கொள்வதன் மூலமே எந்த ஒரு விடயத்தையும் சரியாக கையாள முடியும்.முதலில் ஏற்படக்கூடிய தோல்விகளை பொருட்டாக எண்ணிக்கொண்டு முயற்சி செய்வதைவிட ஊதியத்திற்கு தகுந்த ஒரு வேலையை தேடிக் கொள்வது தான் சிறந்தது என்ற நிலைப்பாட்டை விட்டுவிட வேண்டும்.உங்களால் முடியுமான ஒன்றை முதலில் செய்வதற்கு நீங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும்.அந்த ஒரு துணிச்சல் தான் உங்களை உங்களுக்கே உணர்த்தும் செயல்பாடாக மாறும்.
தனித்து முயற்சியுங்கள்
பணத்தை வைத்து எதையும் அளவிடாதீர்கள்.

நன்றி : Sri Lankan Business Ideas அட்மின்