தற்போது கிடைத்த விசேட செய்தி..வடக்கில் இன்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இன்று வடமாகாணத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று வட மாகாணத்தில் 485 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் யாழ் மாவட்டத்தில் 04 பேர், மன்னார் மாவட்டத்தில் 02, முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.யாழ் மாவட்டத்தில், உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 11பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.