குப்பிளான் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

திருகோணமலை நிலாவெளி கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற குறித்த இளைஞர்கள் நிலாவெளி கடற்கரையில் நீராட சென்றவேளை நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்கள் யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்த 21 வயதையுடைய சிந்துஜன் மற்றும் கௌதமன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிந்துஜன் வயாவிளான் மத்திய கல்லூரியும், கௌதமன் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர்கள் ஆவார்.

நண்பர்களுடன் நேற்று திருகோணேஸ்வரம் ஆலயத்துக்கு சென்ற நிலையில் பின்னர் நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்றிருந்த சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இளைஞர்களில் ஒருவரான சிந்துஜன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , குறித்த இளைஞர்களின் மரணம் குப்பிளான் கிராமத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.