உலகின் முன்னனி விற்பனை நிறுவனத்தின் கால் துடைப்பானாக மாறிய இலங்கையின் தேசியக் கொடி.!! கடும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

இலங்கையின் தேசியக் கொடி கால் துடைப்பானாக விற்பனை செய்யப்படுகின்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல இலங்கையின் தேசியக் கொடியின் சின்னம் அடங்கிய செருப்புகளும் விற்பனைக்காக இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.உலகின் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனமாகிய அமசோன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ விற்பனை தளத்தில் இலங்கையின் தேசியக் கொடியின் சின்னம் அடங்கிய கால் துடைப்பான்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விலை 12 அமெரிக்க டொலராகும்.இலங்கையின் ரூபாவில் இது இரண்டாயிரத்திற்கும் அதிகமாகும்.இந்நிலையில் இலங்கை தேசிய கொடியின் அமைப்பில் கால் மிதி தயாரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இலங்கையர்கள் கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்த கால் துடைக்கும் கம்பளத்தை உலகம் முழுவதும் விநியோகித்து வருகிறது.இந்நிலையில், இந்த கால் துடைக்கும் கம்பளம் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் கம்பளத்தை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இதனை இலங்கைக்கு அனுப்பி வைக்க 9.20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றது. அமேசான் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன் அந்த நிறுவனத்தில் 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தொழில் புரிந்து வருகின்றனர்.