இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு தேசத்திற்கு கடத்தப்படும் அழகிய பெண்களை ஓமானுக்கு விற்கும் இளம்பெண் தலைமையிலான கும்பல்..!!

இலங்கையில் 20-40 வயதுக்குட்பட்ட பெண்களை வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஓமானில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் வவுனியா பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மஹியங்கனையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவ்வாறு கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளான பெண்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்த மனித கடத்தில் சம்பவம் தெரியவந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக தெஹியத்தகண்டிய பகுதியில் வசிக்கும் ஒரு பெண் முறைப்பாடளித்துள்ளார்.இதன் அடிப்படையில் குறித்த பெண்ணை கைது செய்ய தெஹியத்தகண்டிய நீதவானிடம் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.சந்தேகத்திற்கிடமான பெண்ணும் மற்றவர்களும் மனித கடத்தலில் ஈடுபட்டதாகவும், இளம் அழகான பெண்களை ஓமானுக்கு அழைத்துச் சென்று ஓமானில் உள்ள சுல்தான்களுக்கு விற்றதாகவும் தகவல் கிடைத்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.சந்தேகநபர் பிப்ரவரி 25 ம் திகதி ஓமானில் இருந்து இலங்கைக்கு வந்து வவுனியா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.இன்று (12) அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தபோது பூவரசங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை, இந்த மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுளள்து.மேலும் அந்தப் பெண் மார்ச் 18 அன்று சி.ஐ.டியால் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார் .