60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசித் திட்டத்தில் முன்னுரிமை..!!

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். அதன்படி, மேல் மாகாண முதியோர் இல்லங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேநேரம், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பதால் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.