அடித்தது கோடீஸ்வரயோகம்..கோடாதிபதி சீட்டிழுப்பில் 25 கோடிரூபா வென்ற தமிழ்ப் பெண்மணி உள்ளிட்ட இலங்கையர்கள்..!!

அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி சீட்டிழுப்பின் வெற்றியாளர்கள் ஐவருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து நேற்று காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கோடிபதி கப்ருக 687 மற்றும் 689, சனிக்கிழமை அதிஷ்டம் 3507, 3543 மற்றும் அபிவிருத்தி அதிஷ்டம் 411 ஆகிய வெற்றி வாரங்களின் வெற்றியாளர்களுக்கு இவ்வாறு பிரதமரினால் பரிசு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.வஞ்சாவல, பேராதனை, லுணுவில, புஸ்ஸல்லாவ, மற்றும் கஹவத்த பிரதேசங்களின் குறித்த சீட்டிழுப்பு வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.இந்த வெற்றியாளர்களில் தமிழ் பெண்ணும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சந்தர்ப்பத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அமித கமகே உள்ளிட்ட அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.