சமூக விலகலை கடைப்பிடிக்கும் நோக்கில் அடையாள அட்டை முறை இன்றுமுதல் நடைமுறைக்கு!!

சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட அடையாள அட்டை நடைமுறை இன்று முதல் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஆபத்தான மாவட்டங்களை தவிர்த்து இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களிலுள்ள மக்கள் வெளியே செல்லும் போது அடையாள அட்டை நடைமுறை அமுலாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.கூலி வேலை செய்யும் நபர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், ஹோட்டல்களில் சமைப்பவர்கள், தச்சு, மின்சார வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு இந்த அடையாள அட்டை நடைமுறை அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக நிலையங்கள் உட்பட இடங்களுக்கு செல்பவர்களுக்கு மாத்திரமே இந்த அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலாகும் என அவர் கூறியுள்ளார்.அத்துடன் அத்தியாவசியமற்ற காரணத்திற்காக அடையாள இலக்கத்தை பயன்படுத்தி தடையை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.