வைத்தியசாலைக்குள் தற்கொலை செய்த தாதி..!! வைத்தியருடன் தகாத உறவே காரணம்..? வட்ஸ் அப் அரட்டையில் வெளியான தகவல்!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியொருவர் மர்மமாக மரணமானமை தொடர்பில் மருதானை பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்பன்பொல பகுதியை சேர்ந்த, திருமணமான 28 வயதான பெண் தாதியொருவரே சடலமாக மீட்கப்பட்டார்.வைத்தியசாலையின் 40 வது விடுதி, அறையொன்றில் தரையில் வீழ்ந்து கிடந்த தாதி உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், அவர் உயிரிழந்து விட்டார்.சில தடுப்பூசிகளை செலுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென கருதப்படுகிறது.அதே வைத்தியசாலையில் பணியாற்றும் 40 வயதான வைத்தியர் ஒருவருடனான சட்டவிரோத உறவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இறந்த தாதிக்கும், வைத்தியருக்குமிடையிலான வட்ஸ்அப் அரட்டையை, தாதியின் கணவர் பார்த்துள்ளார். இதனால் குடும்பத்திற்குள் தகராறு எழுந்துள்ளது.இதை தொடர்ந்து, விவாகரத்து செய்யவுள்ளதாக குறிப்பிட்டு, கையொப்பமிடாத கடிதமொன்றை தாதியின் பெற்றோரிடம், கணவர் கொடுத்துள்ளார்.இந்த தகராறை தொடர்ந்து தாதி உயிரை மாய்த்திருக்கலாமெனக் கருதப்படுகிறது.