சிவராத்திரி தினத்தில் திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தில் நிறுவப்பட்ட 108 சிவலிங்கங்கள்..!!

மகா சிவராத்திரி நாளான நேற்று திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தில் 108 சிவலிங்கங்கள் மலை முழுவதும் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி சிவலிங்கங்கள் நிறுவப்படுவது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து.இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தென்கயிலை ஆதீனம் சிவன் மலையில் மூன்று லிங்கங்கள் உயிர்ச்சக்தியூட்டப்பட்டு அமர்த்தப்பட்டன.புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் அவர் அவர்களின் பெயர்களில் இந்த சிவலிங்கங்கள் நிறுவப்பட்டன. இந்நிலையில், மகா சிவராத்திரி நாளான இன்று தென்கயிலை ஆதீனத்தில் 108 சிவலிங்கங்கள் மலை முழுவதும் நிறுவப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.