இலங்கைக்குள் கோவிட் தொற்று பரவி இன்றுடன் ஓராண்டு பூர்த்தி..!!

இலங்கையில் முதலாவது கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன்(11) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.


சுற்றுலா வழிக்காட்டியான ஜயந்த ரணசிங்க என்பவர், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதல் கோவிட் தொற்றாளராவார்.அன்றில் இருந்து இதுவரை இலங்கையில் மொத்தமாக 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 83 ஆயிரத்து 210 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.கோவிட் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 515 பேர் உயிரிழந்துள்ளனர்.