பிரித்தானிய மக்களுக்கு ஓர் ஆறுதலான செய்தி… முதல் முறையாக இறங்குமுகத்தில் செல்லும் நாளாந்த மரணங்கள்..!!

பிரிட்டனில் கொரோனா வைரஸால் மேலும் +329 பேர் இறந்துள்ளனர், இந்த நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,061 ஆக உயர்ந்துள்ளது. இந்த +329 என்ற புதிய இறப்புகள் நேற்றைய 413 ஐ விட குறைந்த அளவிலான எண்ணிக்கையை காட்டுவதாகவும், இது இந்த வாரத்தின் குறைவான மரணங்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக முந்திய வாரங்களில் பதிவான உச்சபட்ச மரணங்களை பிரிட்டன் கடந்து விட்டதாகவும் இனிவரும் நாட்களில் மேலும் குறைவடையலாம் எனவும் எதிர்வு கூறப்படும் நிலையில், இன்னும் “ஆபத்தை நாம் கடந்து விடவில்லை” என பிரிட்டனின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் கூறியுள்ளார்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட மரணங்களில் 29 வயது முதல் 100 வயதுவரையானவர்கள் உள்ளடங்குவதாகவும், இதில் 29 வயதுடையவருக்கு அடிப்படை உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் இருப்பதாக பதிவுகள் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.