தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழ் நகரின் முன்னணி பாடசாலை மாணவிக்கு கொரோனா!!

யாழ் நகரிலுள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அவர், நேற்று முன்தினம் வரை பாடசாலைக்கு சென்றுள்ளார்.


யாழ்ப்பாண பல்கலைகழக மார்ஷல் ஒருவர் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவரது குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், மனைவி மற்றும் மகள் தொற்றிற்குள்ளானது இன்று தெரிய வந்தது.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அந்த மாணவி, நேற்று முன்தினம் (8) வரை பாடசாலையில் நடந்த வகுப்பிற்கு சென்றிருந்தார். அந்த வகுப்பில் 40 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.இதையடுத்து, அந்த வகுப்பு மாணவர்கள்,ஆசிரியருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.