நடு இரவில் காதலி கேட்ட அந்தவொரு விடயத்திற்காக கடையையே உடைத்து உட்புகுந்த காதலனுக்கு நேர்ந்த கதி..!!

ராஜஸ்தானில் தன் காதலிக்காக நடு இரவில் கடையை உடைத்து சொக்லேட் திருடிய நபரை பொலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் சித்ரகூட் நகரில் வசித்து வருகிறார் அவினாஷ். இவர் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த இரவு இருவரும் சந்தித்து பேசிகொண்டிருக்கும் போது, அவினாஷின் காதலி சாக்லெட் சாப்பிட வேண்டும் போல் உள்ளது எனக் கூறி, அதனை உடனே வாங்கிவருமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார்.நடு இரவில் கடை கடையாக திரிந்தும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால், வேறுவழியின்றி காதலியின் ஆசையை நிறைவேற்ற அப்பகுதியில் இருந்த கடையின் பூட்டை உடைத்து, கடைக்குள் வைத்திருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து ரூ5 முதல் ரூ 300 வரையிலான (ரூ.20.000 மதிப்புள்ள) 700 சாக்லெட்டுகளை திருடி தன் காதலிக்கு பரிசாளித்துள்ளார்.

அடுத்தநாள் கடையின் உரிமையாளர் ரிஷாப் காலை கடையை திறக்க முயன்ற போது கதவுகள் உடைக்கப்பட்டு சாக்லெட் மட்டும் திருடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், கடையில் இருந்த சிசிடிவி கமராவை வைத்து அவினாஷை பிடித்து விசாரித்துள்ளனர்.அதையடுத்து அவினாஷை கைது செய்து விசாரித்ததில் தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற நண்பர் ஒருவற் கொடுத்த ஆலோசனையை கேட்டு, கடைக்குள் புகுந்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த சாக்லெட்டுகளை திருடியதாக தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.