யாழ் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..பிரதமர் மஹிந்த விடுத்துள்ள விசேட உத்தரவு..!!

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது உருளைக்கிழங்கு அறுவடைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து, உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு, பிரமர் மஹிந்த ராஜபக்ஷ லங்கா சதோச நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, ஒரு கிலோ கிராம் உருளைக் கிழங்கை, குறித்த விவசாயிகளிடமிருந்து 100 முதல் 110 ரூபா வரையான மானிய விலையில் கொள்வனவு செய்யுமாறு பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்தவாரம் இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில்,இது தொடர்பில் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இதேவேளை யாழ்ப்பாண உருளைக்கிழங்குகளுக்கு தென்னிலங்கை மக்களிடம் சிறந்த வரவேற்பு இருப்பதாகவும் ஏனைய உருளைக்கிழங்குகளைவிட, யாழ்ப்பாண உருளைக்கிழங்கின் வாசமும் சுவையும் அலாதியானது என்றும் அரசின் பிரதானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.