யாழ். போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு..!!

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சகல சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தொற்று நீக்கல் நடவடிக்கை யைத் தொடர்ந்து அனைத்து சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.தொற்று உறுதியான வைத்தியரும் சிகிச்சை முடித்து ஒய்வில் உள்ளார் என்றும் அடுத்தவாரம் மீண்டும் தனது கடமைகளை மேற்கொள்ளவுள்ளார் என்றும் அவர் கூறினார்.அதேவேளை நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கே அனுமதி வழங்கப்பட்டது என்றும் இந்த நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டார்.
மேலும் பார்வையாளர்கள் பார்வையிட வருவதை தவிர்க வேண்டும் என்பதே தாமது கோரிக்கை பிடுப்பதாகவும் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.