தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா மரணங்கள்..!! யாழ். உடுவில் பெண்மணி உட்பட நால்வர் சாவு..!!

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்தம் விசமானமை மற்றும் கோவிட் தொற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.ஹொரபே பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் கடந்த 7ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் நோய்த்தொற்று, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.அகுரன பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கோவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா, புற்று நோய் மற்றும் நீரிழிவு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.