லீசிங்கில் மோட்டார் சைக்கிள் எடுத்தவர்களுக்கான பதிவு ! பகிருங்கள் நண்பர்களுடன்

உலகத்திலேயே மிகப் பயங்கரமான Monsters யார் என்று என்று என்னைக் கேட்டால் ஒன்று வட்டி வங்கிகள் மற்றையது லீசிங் நிறுவனங்கள் என்றுதான் என்னிடமிருந்து ஒன் யுவர் மார்க் பதில்கள் வரும். அனுபவம் கற்றுத் தந்தது. அதனால்தான் படாரென்று இந்த பதில்.

இது இப்படியிருக்க லீசிங் கம்பனிகளுக்குள்ளே இப்படியும் ஒரு வகையான ஸ்கன்டல்’ நடக்கின்றதா என்று அண்மையில் அதிரிந்து போனேன். பின்வருகிக்ற கதையை கேட்ட போது சூரியின் “ஷாக்கக் கொற ஷாக்கக் கொற என்று அப்படியே ஷொக்கிங்தாசாகி விட்டேன்.

அது ஒரு மோட்டார் சைக்கிள்……சரியாக மூன்றரை வருடங்களுக்கு முன்னால் தானும் மோட்டார் சைக்கள் ஓட வேண்டுமென்ற ஆசையில் அந்த தம்பி கொஞ்சம் காசை கட்டி விட்டு (லீசிங் நிறுவனங்களும் வட்டி நிறுவனங்களும்தான் ஆகப் பெரிய சதுரங்க வேட்டையாளர்கள் என்பதனை கவனத்திற கொள்க.. இது வரை இல்லாத ஆசையை சனங்களுக்குள்ளே எப்படியோ வர வைத்து அதில் அல்ட்ரா வணிகம் செய்வார்கள்) கிண்ணியாவில் உளள ஒரு லீசிங் நிறுவனத்தில் மாதாந்த லீசிங்குக்காக ஒரு மோட்டார் பைக் எடுத்திருக்கின்றார்.

கொஞ்ச காலத்துக்கு எல்லாம் சரியாகத்தான் போயிருக்கின்றது. பைக் மைந்தன் வெளிநாடு போக வேண்டிய சூழல். ஆதலால் தனது பைக்கை தம்பியிடம் கொடுத்து “மாதாந்த லீசிங்கினை சரியாகக் கட்டு” என்று அறிவுறுத்தலும் கொடுத்து விட்டு அவன் அலுமினியப் பறவை ஏறி விட்டான்.

ஆனால் அந்த பைக்குக்கு முறையாக மாதாந்த லீசிங் கட்டப்படவில்லை. ஒரு நாள் பகற் பொழுது……வெளிநாடு போன ராசா மகனின் தம்பி பைக்கினை ஓடி வருகின்ற போது குறிஞ்சாக்கேணி பாலத்தடியில் வைத்து கிண்ணியா அந்த கிண்ணியா லீசிங் நிறுவனத்தில பணி புரிகின்ற இருவர் லபக்கென பைக்கினை பிடுங்கிக் கொண்டு சென்று விட்டனர். அண்ணளாக முப்பத்தைந்து ஆயிரம் நிலுவை. அதற்காகத்தான் இந்த அதிரடி எக்சன்.

வெளிநாட்டிலிருக்கின்றவனிடம் பைக் லபக்கை அறிவிக்க கொஞ்ச நாளில் அவனும் வெளிநாட்டிலிருந்து வந்து ஐம்பதினாயிரம் ரூபாவை எடுத்துக் கொண்டு லீசிங் கம்பனிக்கு சென்று காசை கட்டி விட்டு பைக்க எடுத்து வரச் சென்றிருக்கின்றான்.

“முப்பத்தைந்தாயிரம் நிலுவை இருக்கின்றது…ஐமப்தினாயிரம் கட்டுகின்றேன். பைக்கை கொடுங்க்ள என்று கேட்க…அவர்கள் சொன்ன பதில்;…”எங்கள் நிறுவனம் உங்கள் பைக்கைக விற்று விட்டார்கள். நீங்கள் செல்லலாம். இனிமேல் நீங்க்ள மாதாந்த லீசி; நிலுவையை கட்டத் தேவையில்லை…”என்று சொல்ல அவனுக்கு ஷொக்கோ ஷொக்….”என்னிடம் ஒரு முன்னறிவித்தலும் தராமல் உங்களால் அதனை எப்படி விற்க முடியும்” என்று அவன் கோபத்தோடு கேட்டதற்கு அவர்களிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இது நடந்து சரியாக இரண்டரை வருட காலத்தின் பின்னர் இவனுக்கு குறித்த லீசிங் நிறுவனத்தின் கொழும்பு பிரதான அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது…”பைக்குக்கான தவணைக் கட்டண நிலுவை ரூபா. 280,000உளள்து என்றும் அதனைக் கட்டத் தவறுகின்ற பட்சத்தில் அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுமென்றும்” ஒரு கடிதம்.

என்ட ரப்பே….தலையில் கை வைத்துக் கொண்டு “என்னதான் நடக்கின்றது” உச்சியில் ஒரு சம்மட்டி இடி அவனுக்கு. திருகோணமலை அலுவலகத்துக்கு சென்று விசாரித்திருக்கின்றான். உண்மைதான்..அவன் லீசிங்கில் எடுத்த பைக்குக்கான நிலுவை ரூபா. 280,000 இருப்பது உண்மைதான். ஆனால் கிண்ணியா கிளை அலுவலகத்தில எனது பைக்கினை விற்று விட்டதாக சொன்னார்களே..அப்படியென்றால்…மனசுக்குள்ளே இப்போது பொறி தட்ட கட்நத வாரம் கிணணியா பிரதேச செயலாளர் அலுவலகத்துக்குச் சென்று தனது பைக்கின் பதிவிலக்கத்தை கொடுத்து பரிசோதித்துப் பார்த்திருக்கினறான்….

லீசிங் நிறுவனத்தினால் விற்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற அவனது பைக்கின் பதிவு பெற்ற சொந்தக்காரர் (Registered Owner) என்ற இடத்தில் இன்னும்; அவனது பெயர்தான் இருக்கின்றது.

வேறு யார் பெயரிலும் அந்தப் பதிவுப் புத்தகம் மாற்றப்படவில்லை. அவனது பைக்கினை யாருக்காவது லீசிங் நிறுவனம் விற்றிருந்தால் நிச்சயமாக பதிவு பெற்ற சொந்தக்காரரது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும். இன்னும் எனது பெயரே பதிவு பெற்ற சொந்தக்காராக இருக்கிறதென்றால்…”ஓ மை கோட்…அவர்கள்..லீசிங் நிறுவனம் எனது பைக்கினை விற்கவில்லை…கிண்ணியா கிளையில் பணி புரிக்னறவர்கள்தான் பைக்கினை தூக்கி அவர்களாக விற்றிருக்கின்றார்கள்…” இப்போது தனது பைக் சம்பந்தமாக நடந்திருக்கின்ற பெரும் மோசடி அவனுக்கு புரிய ஆரம்பித்தது.

தவிரவும் அவனது மோட்டார் சைக்கிளை அண்மையில் கண்டிருக்கின்றான். பைசல் நகரைச் சேர்நத ஒருவர் ஓடிக் கொண்டு போகின்ற போது அவன் கண்டிருக்கின்றான். பைக்கோட்டியை விசாரித்த போது தான் அந்த பைக்கினை புரோக்கர் மூலமாக வாங்கியதாக தகவல் தந்திருக்கின்றான்.

என்ட ரப்பீ…..தனது பைக்கின லீசிங் நிலுவையை வைத்து லபக்கிய அந்த லீசிங் நிறுவன பணியாளர்கள் செமையாக வைத்து சம்பவம் செய்திருப்பதனை உணர்ந்தான். இந்தப் பிரச்சினையை தூக்கிக் கொண்டு என்னிடம் வந்திருந்தான். “உடனடியாக அந்த நிறுவனத்தில் பணி புரிகின்ற முகாமையாளர்’ மற்றும்; பைக்கை தூக்கியவர்கள் அனைவருக்கெதிராக பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள்..மிகப் பெரும் மொசடி நடந்திருக்கின்றது….இதற்கு எக்சன் எடுத்தேயாக வேண்டும்…இப்படி எத்தனை பேருக்கு இந்த ஜில்மால் வேலைகள செய்திருக்கின்றார்களோ இந்த லீசிங் நிறுவன களவானிகள்…” நடுப் பகல் கொள்ளை.

லீசிங்கின் பெயரால் இப்படி எத்தனை பகற் கொள்ளைகைள்..இப்படி எத்தனை தீரன் அதிகாரம் ஒன்று திரு விளையாடல்கள். ஒரு சட்டததரணியாக நான் சந்தித்த கேஸ்களில் இது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ரொம்ப ஆவலாக இருக்கின்றேன்..இந்த கேசை தொடர்ந்து டீல் பண்ணுவதற்கு…. ஆசை வாரர்ததை காட்டி பஞ்சு மிட்டாய் காட்டி சனங்களை தங்களது நிறுவனத்துக்குள்ளே வர வைத்து அவர்களை வைத்து செய்கின்ற இந்த மாதிரியான கோப்ரேட் துரோகிகளையும் கஸ்மாலங்களையும் அப்படியே விட்டு விட்டால் எதுவுமே தெரியாத அப்பாவிகளுக்கு நடக்கின்ற அநியாயங்கள் இன்னுமின்னும் கூடிக்கொண்டே செல்லும்.

மக்களே கவனம். . .

கிண்ணியா சபருள்ளாஹ்