தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று!!

வடமாகாணத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று வட மாகாணத்தில் 705 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில், யாழ் மாவட்டம் 22 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் 11 பேர் உள்ளடங்குகின்றனர்.மன்னார் மாவட்டத்தில் 17 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.