உறவினருக்காக பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த நபருக்கு நேர்ந்த கதி..!!

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவருக்காக பரீட்சை எழுதிய வேறு ஒரு நபரை அனுராதபுரம் இப்பலோகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இந்த நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

21 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர், தனது உறவினருக்காக கலுவில பரீட்சை நிலையத்தில் கணித பாடத்திற்கான பரீட்சையை எழுதியுள்ளார். இது குறித்து பரீட்சை மேற்பார்வையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.இந்த இளைஞன் திஸ்ஸமஹாராம, வீரவில பிரசேத்தை சேர்ந்தவர் என்பது பரீட்சை எழுதுவதற்காக அனுராதபுரத்திற்கு சென்றுள்ளார் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன்னர் இவ்வாறு வேறு நபர்களுக்காக பரீட்சை எழுதிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.ஒருவர் வலஸ்முல்லை பகுதியிலும் மற்றைய நபர் முல்லைத்தீவிலும் கைசெய்யப்பட்டனர். இலங்கையின் குற்றவியல் சட்டம் மற்றும் பரீட்சை சட்டம் ஆகியவற்றுக்கு அமைய இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.