சடுதியாகக் குறைந்த கொரோனா தொற்று..வேலைசெய்யத் தொடங்கிய தடுப்பூசிகள்..!! நேற்று மட்டும் 82 கொரோனா மரணங்கள்..!!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பேர் மட்டுமே கொரோனா காரணமாக இறந்துள்ள நிலையில், வெறும் 5,000 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சுமார் 21 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில். கடுமையான லாக் டவுன் போடப்பட்டுள்ளது. இதன் காரணத்தால், கொரோனா தொற்று சுமார் 70% சத விகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதோடு மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ள மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.இன்று மார் 8ம் திகதி சில பாடசாலைகள் ஆரம்பித்துள்ள நிலையில், மேலும் சில பாடசாலைகள் மார்ச் 16 ஆரம்பமாக உள்ளது.ஏப்பிரல் 12ம் திகதியோடு பல லாக் டவுன் தளர்வுகள் ஏற்படுகிறது. பின்னர் மே 17 முதல் மேலதிக தளர்வுகள் வரும் என்றும். அதன் பின்னர் ஜூன் 18ம் திகதியோடு நாடு வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்கப்படுகிறது. இருப்பினும் ஜூலை மாதம் வரை முக கவசம் அணிய வேண்டிய கட்டாயம் உள்ளது என்று பிரித்ததானிய அரசு கூறியுள்ளது.