இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.அதன்படி ஹெம்மாத்தகம பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தர்கா நகரைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரும் கொழும்பு 6 ஐச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவரும் ஜா-எலவைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.