அனைத்து இலங்கை மக்களுக்கும் ஓர் நிம்மதி தரும் செய்தி..விரைவில் நாட்டிற்கு வரும் ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகள்..!!

இலங்கைக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள மேலும் ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் எவ்வித தாமதங்களும் இன்றி வழங்கப்படும் என இந்தியாவின் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியை இலங்கைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படும் என இந்தியாவின் சீரம் நிறுவனம் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட தடுப்பூசிகளை தாமதமின்றி வழங்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.கோவிஷீல்ட் என்ற பெயரில் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்து வரும் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 500,000 டோஸ் கடந்த மாதம் இலங்கைக்கு வழங்கப்பட்டது.1.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் சுமார் 5.25 அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளது.இந்நிலையில், மீதமுள்ள 1 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதங்களுக்குள் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.