சீனாவை பின்தள்ளிய ரஷ்யா…ஒட்டுமொத்தமாக 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 87,147பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது, கொரோனா வைரஸ் தொற்றின் தாயகமான சீனாவை விட அதிகம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.சீனாவில் இன்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி, 82,830பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக மூவருக்கு மட்டுமே தொற்றியுள்ளது.இதேவேளை தினசரி தொற்று அதிகரிப்பை சந்தித்துவரும் ரஷ்யாவில், இன்று புதிததாக 6198பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இன்று 47பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது.இதுதவிர, 79,007பேர் சிகிச்சை பெற்று வருவதோடு, 2300பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. 7346பேரின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.