இலங்கையில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று!மொத்த எண்ணிக்கை 557 ஆக அதிகரிப்பு..!

இலங்கையில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 34 பேரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை நேற்று 53 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி 16 பேர் வெலிசர முகாமிலும் மேலும் 37 பேர் விடுப்பில் இருந்தவர்கள் என்றும் இராணுவ தளபதி தெரிவித்திருந்தார்.இந்நிலையில், மொத்தமாக 129 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இன்று 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 126 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் 7 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.