பறக்கும் கப்பலினால் பரபரப்பு..இணையத்தில் வேகமாகப் பரவும் புகைப்படம்..!!

கப்பல் ஒன்றின் புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் அந்த கப்பல் கடலில் மிதக்கிறதா அல்லது பறக்கிறதா என்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ள நிலைதான். வைரல் படத்தை ஸ்காட்லாந்தின் அபெர்டீனைச் சேர்ந்த கொலின் மெக்கல்லம் என்ற நபர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இணையத்தில் ஷேர் செய்யப்பட்ட இந்தப் புகைப்படம் கப்பலில் இருந்து வெகு தூரத்திலிருந்து கிளிக் செய்யப்பட்டது. அந்த படத்தில் சிவப்பு நிற கப்பல் ஒன்று காணப்பட்டது.

ஆனால், கப்பல் பார்ப்பதற்கு தண்ணீரில் இருப்பது போன்று தெரியவில்லை.மாறாக வானத்தில் மிதப்பது போல் காட்சியளித்தது. இந்தப் படம் தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.வெயில் காலத்தில் நாம் சாலையில் வாகனங்களில் செல்லும் போது ஆங்காங்கே நீர் தேங்கி இருப்பது போன்ற optical illusion தெரியும். அதுபோல கடலில் நின்றுகொண்டு இருந்த கப்பல் கீழ் பாகம் வரை மேகங்கள் படர்ந்து இருக்க, கப்பல் பறப்பது போல காட்சி அளித்தது.படத்தை நன்றாக உற்று நோக்கினால் கப்பலை மேகக்கூட்டங்கள் மறைத்துள்ளது நன்கு புலப்படும். திடீரென்று பார்த்தால் மட்டுமே, கப்பல் காற்றில் மிதப்பது போலத் தோன்றும்.இதுவரை யாரும் கண்டிராத இந்த பறக்கும் கப்பல் பல சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் உண்மையில் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த பின் பலரும் அவர்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.அதில் ஒரு யூசர் இதை உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை, இது எப்படி சாத்தியம் என்று கேட்டிருக்கிறார்.மற்றொரு யூசர் இதை யாரோ கிராபிக் செய்துள்ளார் போலிருக்கிறது என்று கூறினார்.ஆனால், உண்மை தெரிந்த ஒரு சில யூசர்கள் இந்த படத்தை எடுத்த நபரை பாராட்டினர். சில யூசர்கள் படத்தின் நிலைக்கான விளக்கத்தை கருத்துக்கள் பிரிவில் அளித்துள்ளனர்.காலநிலை மாற்றம் அல்லது குறிப்பிட்ட இடத்தில் கப்பல் பயணிக்கும் போது இது போன்ற இயற்கை அதிசயங்கள் நடைபெறுவதுண்டு.மேகக்கூட்டங்கள் சூழ்ந்து இருக்கும் இடத்தில் கப்பலோ அல்லது விமானமோ சென்றால் அங்குள்ள மேகக்கூட்டங்கள் கப்பல் அல்லது விமானத்தை மறைக்கும்.அந்த வகையில் இந்த அதிசயமான புகைப்படத்தில் மேகங்கள் சரியாக கப்பலின் பாதி பகுதியை மறைத்துவிட்டு மேல் பாகத்தை மட்டும் காட்டியதால் பலரும் இந்த புகைப்படத்தை கண்டு அதிர்ந்துள்ளனர்