கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது அவரது வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

டுபாய் செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாமல் சென்றுள்ளார். இதன் போது அதிகாரிகள் அவரது பயணத்தை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ஷ நிதி தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.எனினும் பின்னர் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அரச நிறுவனங்களுக்குள் உள்ள தொடர்பு குறைபாடுகள் காரணமாக அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தல்கள் இல்லை.இதுதொடர்பான தெளிவுபடுத்தலை நாமல் ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். அதன் பின்னர் டுபாய் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.