கதிர்காமக் கந்தன் பக்தர்களுக்கு மிக முக்கியமான செய்தி..மாலைகளுக்கு வருகிறது புதிய தடை..!!

கதிர்காமம் புனித தலத்திற்கு பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டில் புனித தலங்களுக்கு அருகாமையில் பொலித்தீனால் கட்டப்படும் மாலைகளை விற்பனை செய்வதை தவிர்க்குமாறு, மத்திய சுற்றாடல் அதிகார சபை வர்த்தகர்களை கோரியுள்ளது.


அதன்படி கதிர்காமம் புனித தலத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கதிர்காமக் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் பல வர்த்தகர்கள் பொலித்தீன்களாலான மாலைகளை தயாரித்து தங்களது வாழ்கையை நடத்திச் செல்கின்றனர்.
இந்த நிலையில், குறித்த வர்த்தகர்களுக்கு கடதாசிகளாலான மாலைகளை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சிகளை தேசிய அருங்கலைகள் சபை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது