400 அறைகளைக் கொண்ட பிரமாண்டமான விடுதி!! விண்வெளியில் அமைக்கப் போகும் நாஸா..!!

விண்வெளியில் சகல வசதிகளுடன் கூடிய விடுதி ஒன்றை அமைக்க நாசா தீர்மானித்துள்ளது.இந்த விடுதி சுமார் 400 அறைகளை கொண்டதாக 2025 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலவுக்கு இணையான ஈர்ப்பு விசையை கொண்ட பகுதியில் இந்த விடுதி அமைக்கப்பட உள்ளதாகவும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த விடுதியில் திரையரங்குகள், உணவகங்கள், மதுபானசாலைகள் என பல விடயங்கள் உள்ளடக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் நிர்மாணப்பணிகள் 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டில் நிறைவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.எனவே 2027ஆம் ஆண்டின் பின்னரே மக்களின் பாவனைக்காக இந்த கனவு விடுதி திறக்கப்படும் எனவும் நாசா குறிப்பிடுகின்றது.