எதிர்வரும் நாட்களில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 6 ம் திகதியிலிருந்து மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அத்துடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.